உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காலையடி பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் (23,02 2017) இன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-02-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

//people.panipulam.net/#!album-634

 மாசி 01 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565 – ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான். Read the rest of this entry »

ஐநா பொதுச் செயலர் அந்தோனியோ குட்ரெஸ் விரைவில் சிறீலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமையன்று புதிய ஐநா பொதுச் செயலர் அந்தோனியோ குட்ரெசைச் சந்தித்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறீலங்காவுக்குப் பயணம் செய்யுமாறு ஐநா பொதுச் செயலருக்கு அழைப்பு விடுத்தார். Read the rest of this entry »

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இளம் பொறியியலாளர் தனது நண்பருடன் ,கான்சாஸ் என்ற பகுதியில் உள்ள மதுவிடுதிக்கு சென்ற போது அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். Read the rest of this entry »

திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டு வந்த மனையாவெளிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நோயாளியை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எச்.எம்.ஹம்ஸா, இன்று (01) உத்தரவிட்டார். Read the rest of this entry »

வழக்கமான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் தன்னுடைய வீட்டில் தங்கியிருப்பதாகவும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம். எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read the rest of this entry »

வலி. விடக்கு அச்சுவேலியினூடாக தெல்லிப்பளைக்குச் செல்லும் பிரதான வீதியான வயாவிளான் – தோலகட்டி வீதியை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். Read the rest of this entry »

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்ட தனுஷ், இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் ‘பவர் பாண்டி’. இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா, சாயா சிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். Read the rest of this entry »

மாசி 28 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784 – ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844 – USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. Read the rest of this entry »

பிரான்ஸ் நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தினர். Read the rest of this entry »

யாழ். போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் இன்று ஒருமணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.“10 வருடமாக உள்ள பதவி உயர்வை 6 வருடமாக மாற்று” , “தாதிய பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளை வழங்கு” , “அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட Read the rest of this entry »

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் இந்திய என்ஜினீயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. Read the rest of this entry »

வவனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழமாக மாற்றக்கோரி,  வவுனியாவில் பேரணியொன்று இன்று இடம்பெற்றது.யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக, கடந்த 25 ஆண்டுகளாக இயங்கும், வவுனுவில் இயங்குளம் வளாகத்தினை, தனியான வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்