உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive


தகவல் – சின்னத்துரை ஜெயராசா(Norway)

பல நூறு கோடி பணத்தில் ஆலய திருப்பணிகளை பஞ்சவர்ண ஆடம்பர அலங்கார வேலைப்பாடுகளுடன் மேற்கொள்ளவிருக்கின்றீர்கள்.ஆகவே,தங்களிடம் வேண்டிக்கொள்வது யாதெனில்,
1. அம்பாளின் விஸ்வரூப சீற்றத்தை தணிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து செய்ய      வேண்டிய பரிகார யாகத்தை முதற்கண் செய்வீர்களா?
2. திருப்பணிக்கு பல நூறு கோடிகள் செலவு செய்வதற்கு தகுதிவாய்ந்த தாங்கள் ஆலய வளவிற்குள் வீடுகள் அமைத்து வாழும் நிலத்தை அம்பாளுக்கு அன்பளிப்பு  செய்துவிட்டு ஆலய சுற்றாடலுக்கு அப்பால் சென்று குடியிருப்பீர்களா? இது ஆலய தூய்மையை பேணுவதற்கு முக்கியமானதாகும்.

Read the rest of this entry »

வரவு ; 2016 ம் ஆண்டு மீதிக் கையிருப்பு 20056 .௦௦
2017 ம் ஆண்டு அன்பளிப்பு 1082950 .௦௦
மிகுதிப் பொருள் ஏல விற்பனை 5950 .௦௦
மொத்தம் 1108956 .௦௦
செலவு ; 819464 .௦௦
கையிருப்பு ; 9492 .௦௦
வங்கி நிலையான வைப்பு; 280000 .௦௦
மொத்தம் ; 1108956 .௦௦

2016 வங்கி நிலையான வைப்பு ‘; 407000 .௦௦
2017 வங்கி நிலையான வைப்பு ; 280000 .௦௦

பணிப்புலம் அம்பாள் அன்னதான சபை
பணிப்புலம்
பண்டத்தரிப்பு .

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பணிப்புலம் என்னும் ஊரில் பல நூற்றாண்டுகள் பழைவாய்ந்த “பணிப்புலம் முத்துமாரி அம்மன்” ஆலயம் அமைந்திருக்கிறது.ஆரம்ப காலங்களில் இந்த ஆலயத்தில் பொங்கல் வழிபாடு ஆடு,கோழி பலியிடப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. பின்னர் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உயிர்ப்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டு ஊர் மக்களால் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது. 1950ம் ஆண்டு காலப்பகுதியில் அலங்காரத் திருவிழா,பிரம்மோற்ஷவத் திருவிழாவாக மாற்றம் பெற்று,கொடியேற்றி பத்தாம்நாள் தேர்த் திருவிழா வரையும்,மேலும் நவராத்திரி,மார்கழி திருவெம்பாவை, என அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக ஊர் மக்களால் நடாத்தப்பட்டு வந்தது.ஆலயத்தின் நிரவாகப் பணிகளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட “ஆலய பரிபாலன சபையினர் கவனித்து வந்தனர். Read the rest of this entry »

பாவம் செய்த மக்கள்
——————————–
ஒரு ஊரில் ஒரு குளம் .அந்த ஊருக்கு அது ஒரு முக்கியமான குளம் .அவ் ஊரிலுள்ள அனைவரும் அக் குளத்து நீரையே விரும்பிக் குடிப்பர் .மிகப் பழமையான குளம் என்பதால் அவ் ஊர் மக்கள் அனைவரும் அக்குளமே தமது வாழ்க்கைக்கு காரணமெனப் பெருமையுடன் கூறி வருகின்றனர் .இக்குளம் காலத்துக்கு காலம் அதை பயன்படுத்துவோரால் செப்பனிடப்பட்டு வந்தது .ஆரம்பத்தில் மிகச் சிறுகுளமாக இருந்து பின் வளர்ச்ச்சி அடைந்து இப்போ அவ் ஊரில் ஒரு பெரிய குளமாக அவ்வூரில் காணப் படுகிறது .அவ்வூரில் வேறு பல சிறிய குளங்கள் இருந்த போதும் மக்கள் இக் குளத்திலேயே அதிகம் நாட்டம் கொண்டு வருவது அந்தக் குளத்தின் தனிச் சிறப்பே .
அக்குளத்தில் ஆடிப்பூர நட்ஷத்திரத்தின் முந்திய பதினைந்து நாட்கள் விசேட நீர் ஊற்றுக்கள் காணப் படுவது அக்குளத்தின் விசேட சிறப்பாகும் .இக்காலங்களில் அவ்வூரிலிருந்து பிற இடங்களில் ,வெளிநாடுகளில் சென்று வாழ்வோர் கூட அங்கு வந்து அந்த நீரைப் பருகத் தவறுவதில்லை .அக்குளத்துடன் சம்மந்தமான நான்கு பிரிவுகள் உண்டு .குளம் ,குளத்துநீர் ,அதை பயன்படுத்தும் மக்கள் ,குளத்துக்கு உரிமை கோரும் ஒரு பிரிவினர் . Read the rest of this entry »

2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த கொழும்பு பாதுகாப்பு மாநாடு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »

Pan Kalai invited you
Summer Get-together 2017
03-09-2017

இள மழழைகள் பிரிவு: ((KG))

அம்மா

என்னை படைத்தவர் என் அம்மா.எனக்காக கண் விழித்தவர் என் அம்மா.எனக்காக பசி இருந்தவர் என்அம்மா.என்னைக் பாதுகாத்தவர் என் அம்மா.எனக்குப் பாலும் உணவும் ஊட்டியவர் என் அம்மா.என் கை பிடித்துஎன்னை நடக்கச் செய்தவர் என் அம்மா.எனக்கு பாடம் சொல்லித் தருபவர் என் அம்மா.என்னை அழகுபடுத்திமகிழ்பவள் என் அம்மா.அன்பின் உலகம் என் அம்மா.என் அம்மாவைப்போல் ஒரு தெய்வமில்லை.என்அம்மாவை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.அவரின் விருப்பம் போல் நடப்பேன்.படித்துப் பெரியவன்ஆவேன்.அவரை மகிழ வைப்பேன். அதில் நானும் மகிழ்வேன்.இது உறுதி.

நன்றி

வணக்கம்

முதுமழழைகள் பிரிவு ((1-2)) Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்