தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

September 19, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1356 – இங்கிலாந்து “போல்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்றது.
1658 – யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.
1870 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28 இல் புருசியாவிடம் வீழ்ந்தது. Read the rest of this entry »

September 18, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
1635 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பேர்டினண்ட் பிரான்ஸ் மீது போர் தொடுத்தான்.
1739 – பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
1759 – கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர். Read the rest of this entry »

September 14, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.
1846 – யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர். Read the rest of this entry »

September 13, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1914 – முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1923 – ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.
1939 – கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது. Read the rest of this entry »

September 12, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1609 – ஹென்றி ஹட்சன் ஹட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
1683 – ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.
1759 – பிரித்தானியப் படையினர் கியூபெக் நகரைக் கைப்பற்றினர்.
1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
1857 – வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426 பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13-15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது. Read the rest of this entry »

September 11, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1297 – ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
1541 – சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான பழங்குடிகளினால் அழிக்கப்பட்டது.
1609 – ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார்.
1649 – ஒலிவர் குரொம்வெல்லின் இங்கிலாந்து நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர். Read the rest of this entry »

September 8, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1493 – ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
1513 -ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
1543 – மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1791 – அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.
1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. Read the rest of this entry »

September 8, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1514 – லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.
1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
1727 – இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
1796 – பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர். Read the rest of this entry »

September 7, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1191 – சலாகுத்தீனை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அற்சுப்பில் நிகழ்ந்த சண்டையில் தோற்கடித்தார்.
1228 – புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.
1539 – குரு அங்காட் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார். Read the rest of this entry »

September 6, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
1776 – கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியின் படூக்கா நகரைக் கைப்பற்றினர். Read the rest of this entry »

1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டான்.
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1800 – மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
1839 – முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது. Read the rest of this entry »

 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1642 – இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.
1666 – இலண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
1752 – கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Read the rest of this entry »

உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1715 – பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.
1752 – விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.
1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர். Read the rest of this entry »

August 31 2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது. Read the rest of this entry »

August 29 2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-ரஷ்யக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்காப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்