‘அறிவித்தல்’

எனது வீட்டு மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது என்பதுதான் என் சந்தேகம் ? Read the rest of this entry »
தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடலும் பரிசில் வழங்கல் நிகழ்வும்.
எமது கிராமத்தில் (பனிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, செருக்கப்புலம், செட்டிகுறிச்சி, சாந்தை, குஞ்சன் கலட்டி, கலட்டி) தற்போது தரம் 5 இல் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 13.11.2012 (செவ்வாய்) பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்றத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது. Read the rest of this entry »


அன்னாரின் தகனக்கிரிகை நடந்த தினத்தன்று மறுமலர்ச்சி மன்றத்தால் எமது ஊரில் வெளியிடப் பெற்ற அஞ்சலி பிரசுரம் எமது கையில் தற்பொழுதே கிடைக்கப் பெற்றுள்ளது.
பணிப்புலம் சனசமூகநிலைய நிர்மாண வேலை ஆரம்ப நாளன்று ஆலயத்தை இன்று நடத்துபவர்கள் ஆரம்ப வேலையை ஆரம்பிக்க தடை போட்டனர். அவர்கள் வாசிகசாலை நிர்வாகம் தங்களுக்கு வாடகை கட்டும்படி வற்ப்புறுத்திய போதும் பொதுமக்களும் நிர்வாகமும் மறுத்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் 500 ரூபா ஆலயத்துக்கு திருவிழாவுக்கு அன்பளிப்பு தருவதாய் ஒப்பந்தமானது. இதன்படி கடிதம் வழங்கப்பட்டது. இதன் பின்னரே வேலைகள் ஆரம்பமாகியது. வேலைகளை தொடங்கி தொடர இருக்கும் இந்நிலையில் மீண்டும் புதிய ஒரு தடை போட ஆலயத்தின் தற்போதைய உரிமையாளர்கள் என கூறுபவர்கள் பிரதேச சபைக்கு ஒரு சமாதான நீதவனின் உதவியுடன் சென்று தங்கள் கோயில் வளவுக்குள் பொதுமக்கள் வாசிகசாலை கட்டுவதாயும் தங்களின் நிலத்தை அபகரிப்பதாயும் ஒரு புகார் அளித்துள்ளனர்………………… Read the rest of this entry »
கடந்த 19.06.2011. அன்று இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற ஒன்று கூடலில்எமது இத்தாலி வாழ் எமது ஊர் மக்கள் அனைவரும் இணைந்து ஒரு ஒன்றியம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு பண் மக்கள் ஒன்றியம் என்ற பெயர் சூட்ட பட்டது, மேலும் பல தரப்பட்ட விடயங்கள் கலந்து உரையாட பட்டது,ஒன்றியத்தின் இந் நிகழ்வில் தலைவராக ர.ரவிந்த்திரனையும், செயலாளராக ச.விக்னேஸ்வரனையும் , பொருளாளராக சிந்துஜனும் தெரிவு செய்யபட்டனர். பின் ஆலோசராக கோணேஸ்வரன், ஜெயக்குமார், வேல்முருகன், சிங்கராசா, தேவகுசன், ரெங்கன், சங்கர் ஆகியோர் பின் ஆலோசராக தெரிவு செய்யப்பட்டனர்.
மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் இணையத்தில் விட்ட அறிவித்தலுக்கு மன்ற நிர்வாகத்தின் பதில்.
மன்றத்தில் இன்று நடைபெற்ற கட்டிடகுழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள்ளவாறு ; கோயில் கட்டுவது தொடர்பாக இன்று கட்டிட குழு கலந்துரையாடலின் படி கோயில் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. கோயில் கட்டிடம் கட்டிட கலைஞரின் திட்டத்திற்கு அமைவாக இல்லாது கட்டப்படுவதாக வெளியிடப்பட்ட அனோமதேய துண்டுப்பிரசுரம் தவறானது என்று குழு தீர்மானித்துள்ளது. காரணம் கட்டிட கலைஞரின் கடந்த 12.03.2011 இல் நடந்த ஊர் மக்களுக்கான காட்சிப்படுத்தல் விளக்கத்தில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் உங்கள் ஆகமவிதிப்படி திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும். ஆனால் ஒதுக்கிய இடம் மாற்றமுடியாது என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படியே கட்டிடம் அமைக்கப்படுகிறது. ஆலயம் அமையும் பகுதி கட்டிட வரைபடத்தின் படியான மைதானத்தை உருவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த ஆலய நகர்வுக்கு அதாவது மைதானத்தை அமைக்கும் வகையிலான இடமாற்றத்துக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி கூறுவதோடு இளைஞர்களின் மைதானக்கனவின் யதார்த்த நோக்கில் நம்பிக்கை வைத்து இப்பிரசுரத்தை மன்றத்தலைவரின் முன் அனுமதி இன்றி பிரசுரித்த பணிப்புலம் இணையத்தினரின் முயற்சியை மன்னித்து அவர்களின் ஏகோபித்த பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். -அழ. பகீரதன் தலைவர் மறுமலர்ச்சி மன்றம்
தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம்
பிற்போடப்பட்டுள்ளது. திகதி பின்னர் அறிவிக்கப்படும்
சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்
பழைய மாணவர் சங்க கூட்டம்
காலம் : 16.02.2011 புதன்கிழமை காலை 9 மணி
இடம் : வித்துவான் மு விருத்தாசலம் ஞாபகார்த்த மண்டபம்
தலைமை : திரு சு கணேசதாசன் (பாடசாலை அதிபர்)











































