‘கோவில்கள்’
படப்பிடிப்பாளர் திரு.உமைபாலன்
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க, புதிய மருந்து லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை, மது அருந்தும் இச்சை கட்டுப்படும்’ என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலக அளவில், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான சாலை விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன. விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Read the rest of this entry »
மஹோற்சவ விழா படங்களை அனுப்பிவைத்து உலகம் முழுதும் பரந்து வாழும் சைவப் பெருமக்கள் அனைவரும் “காமாட்ஷி அம்பிகையை” தரிசிக்கும் பெருந் தொண்டைச் செய்தவர்: திருக்கேதீஸ்வரன் நவரத்தினம் அவர்கள் – ஜேர்மனி
சிவபூமி என அழைக்கப்படும் ஈழத் திரு நாட்டின் வடபால் அமைந்துள்ளது இந்துக்கள் நிறைந்து வாழும் யாழ்ப்பாணமாகும் .இதன் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள மிகப் பழம் துறைமுகம் ஜம்புகோளம் எனப்படும் சம்பில்த்துறையாகும்.அன்றைய புத்த தர்மம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நுழைவாயில் இதுவே என இலங்கையின் வரலாற்றைக் கூறும் மிகப் பழம் சிங்கள இலக்கிய நூலான மகாவம்சம் கூறுகிறது .
கிராம வரலாறு
சம்பில்த்துறை பண்டைக்காலத்தில் மிகப் பெரும் வணிகத் துறையாக விளங்கி யுள்ளது .இக் காலத்தில் இப்பகுதி திசமழவன் என்ற தமிழ் மன்னனின் சிற்றரசாக இருந்ததாகக்
கூறப் படுகிறது .இதற்காதாரமாக இருப்பது சுழிபுரம் கிழக்கு கண்ணகை அம்மன் திசைமளை கண்ணகை எனவும் இதனூடாக சம்பில்துறையை அடையும் வீதி மழுவை வீதி எனவும் காணப்படுகிறது .இத் துறையின் ஊடாக வணிகம் செய்தவர்களில் மிகவும் பிரபல்யமானவர்கள் தென்னிந்தியச் செட்டியார் இனத்தவர்களேயாவர் .வணிகம் செய்ய வந்தவர்கள் நாளடைவில் இத்துறையின் தென்கிழக்கு பக்கமாக உள்ள மறுத்த நிலத்தை அண்டிய பகுதிகளில் தம் குடியிருப்பை அமைத்தனர் .இவர்கள் குடியிருப்புகள் சாந்தை செட்டிகுறிச்சி சாத்தாஒலை காலையடி சுழிபுரம் கிழக்கு திசமளை குன்சங்கலட்டி மாதகல் மேற்கு ஆகிய பகுதிகளில் அமைந்ததாக அறிய முடிகிறது .இதற்கு ஆதாரமாக “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “என்பதர்க் கேற்ப இவர்களால் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களாகும் .சாத்தாஒலை சிவன் (சம்பு நாதேச்வரம் ) திசைமளை கண்ணகை அம்மன் ஆலயம் சாந்தை ஈஸ்வரவினாயகர் ஆலயம் மாதகல் மேற்கு ஐயனார் ஆலயம் காலையடி ஞானவேலாயூதர் ஆலயம் வெற்றிமடம் முருகன் ஆலயம் ஆகிய இவ் ஊர் ஆலயமனைத்தும் இவர்களால் அமைக்கப்பட்டதேயாகும் . Read the rest of this entry »
நன்றி – திருக்கேதீஸ்வரன் நவரட்னம் அவர்ளுக்கு
25.05.2013 – ஜேர்மனி-ஹம் காமாட்ஷி அம்பாள் ”10 ம் – திருவிழா”
மற்றும் ஜேர்மனி வாழ் எம்மூர் மக்களின் தாகசாந்தி சேவை அத்துடன்
தேர்த் திருவிழாவிற்கு வருகைதரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஆயத்தங்கள் ஆகிய படங்கள்
Foto- Thirukketheeswaran Navaratnam
Foto – Thirukketheeswaran Navaratnam





































