உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



‘முத்தமிழ்’

பாவம் செய்த மக்கள்
——————————–
ஒரு ஊரில் ஒரு குளம் .அந்த ஊருக்கு அது ஒரு முக்கியமான குளம் .அவ் ஊரிலுள்ள அனைவரும் அக் குளத்து நீரையே விரும்பிக் குடிப்பர் .மிகப் பழமையான குளம் என்பதால் அவ் ஊர் மக்கள் அனைவரும் அக்குளமே தமது வாழ்க்கைக்கு காரணமெனப் பெருமையுடன் கூறி வருகின்றனர் .இக்குளம் காலத்துக்கு காலம் அதை பயன்படுத்துவோரால் செப்பனிடப்பட்டு வந்தது .ஆரம்பத்தில் மிகச் சிறுகுளமாக இருந்து பின் வளர்ச்ச்சி அடைந்து இப்போ அவ் ஊரில் ஒரு பெரிய குளமாக அவ்வூரில் காணப் படுகிறது .அவ்வூரில் வேறு பல சிறிய குளங்கள் இருந்த போதும் மக்கள் இக் குளத்திலேயே அதிகம் நாட்டம் கொண்டு வருவது அந்தக் குளத்தின் தனிச் சிறப்பே .
அக்குளத்தில் ஆடிப்பூர நட்ஷத்திரத்தின் முந்திய பதினைந்து நாட்கள் விசேட நீர் ஊற்றுக்கள் காணப் படுவது அக்குளத்தின் விசேட சிறப்பாகும் .இக்காலங்களில் அவ்வூரிலிருந்து பிற இடங்களில் ,வெளிநாடுகளில் சென்று வாழ்வோர் கூட அங்கு வந்து அந்த நீரைப் பருகத் தவறுவதில்லை .அக்குளத்துடன் சம்மந்தமான நான்கு பிரிவுகள் உண்டு .குளம் ,குளத்துநீர் ,அதை பயன்படுத்தும் மக்கள் ,குளத்துக்கு உரிமை கோரும் ஒரு பிரிவினர் . Read the rest of this entry »

பெப்ரவரி 11, 1924 வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் 3 ஆம் வகுப்பில் சேர்ந்தார். பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். 1938 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். இரண்டு ஆண்டுகளில் சங்கீத வித்துவானாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார். 1944 இல் அண்ணாவியார் சின்னய்யாவின் மகள் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். Read the rest of this entry »

அன்று,கனடிய மண்ணின் முதன்முதலில் கால் பதித்த காலமது.டொரோண்டோ நகர வீதியின் பல இடங்களில் வழக்கறிஞர்களின்  ”need quick divorce ,call 416-0000000 ‘ என்ற விளம்பர ங்களை வாசித்து வியந்திருக்கிறேன். [தங்கள் வருமானத்திற்காக] ”அடுத்தவனை விட நான் கெதியாக உங்களை பிரித்து வைப்பதில் கெட்டிக்காரன்” என்று அவ்விளம்பரம் என் காதுக்குள் குசுகுசுக்க எனையறியாமல் எனக்குள் நான் சிரித்திருக்கிறேன். இத்தனை தூரம் திருமண வாழ்க்கை என்பது காசு வைத்து ஆடும் ஒரு ஆடு,மாடு மந்தைகளின் தொழில் போன்று   மேற்கு நாடுகளில் மலிந்துவிட்ட்து என எண்ணினேன்.

Read the rest of this entry »

imagesதன் வாழ்நாள் முழுவதையும் குடும்பத்துக்காகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணிப்பவரே தந்தை.  அந்த தந்தையை போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக ஆண்டுதோறும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடும் வழக்கம் பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
1862ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட். இவர் வாஷிங்டன் அருகே உள்ள ஸ்போகேனே என்ற நகரில் மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன் வசித்து வந்தார். Read the rest of this entry »

Untitled-13

imagesபாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உலகப் புத்தக நாளைக் கொண்டாடும் இந்த வழக்கம் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆரம்பித்ததாகும். அந்த நாட்டில் பிறந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மிகேல் தெ செர்வாந்தஸை கௌரவிக்கும் நோக்கோடு அந்த நாளை ஸ்பெயின் அரசாங்கம் கடைபிடிக்கத் தொடங்கியது. அந்த நாளில்தான் செர்வாந்தஸ் மரணம் அடைந்தார். Read the rest of this entry »

Untitled-hjo

untitledஉலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911.   ஆரம்பித்து .ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. Read the rest of this entry »

Untitled-1

Untitled-1

Untitled-1dhjy

imagesபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம்  வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான். Read the rest of this entry »

love

Untitled-dd1

01 Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்