தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘செய்திகள்’

பல நூறு கோடி பணத்தில் ஆலய திருப்பணிகளை பஞ்சவர்ண ஆடம்பர அலங்கார வேலைப்பாடுகளுடன் மேற்கொள்ளவிருக்கின்றீர்கள்.ஆகவே,தங்களிடம் வேண்டிக்கொள்வது யாதெனில்,
1. அம்பாளின் விஸ்வரூப சீற்றத்தை தணிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து செய்ய      வேண்டிய பரிகார யாகத்தை முதற்கண் செய்வீர்களா?
2. திருப்பணிக்கு பல நூறு கோடிகள் செலவு செய்வதற்கு தகுதிவாய்ந்த தாங்கள் ஆலய வளவிற்குள் வீடுகள் அமைத்து வாழும் நிலத்தை அம்பாளுக்கு அன்பளிப்பு  செய்துவிட்டு ஆலய சுற்றாடலுக்கு அப்பால் சென்று குடியிருப்பீர்களா? இது ஆலய தூய்மையை பேணுவதற்கு முக்கியமானதாகும்.

Read the rest of this entry »

முல்லைத்தீவு – மணலாறு – ஜனகபுரம் பகுதியில் மூன்று  பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும், 2 பெண்கள் உட்பட  16 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பீப்பாய் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தி பொலிசாரால் முறியடிக்கப்பட்டது. Read the rest of this entry »

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைபு மற்றும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அழுத்தம் கொடுத்து கடிதம் அனுப்பியுள்ளன. Read the rest of this entry »

மேற்கு லண்டனில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலருக்கும் முகங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. Read the rest of this entry »

 September 15, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1556 – புனித ரோமப் பேரரசின் முன்னாள் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் ஸ்பெயின் திரும்பினான்.
1812 – நெப்போலியன் பொனபார்ட் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் மொஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை அடைந்தனர்.
1821 – ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன. Read the rest of this entry »

இலங்கையில் இருந்து மங்களூருக்குச் சென்ற கொழும்பு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் கொள்கலனில் இருந்து எட்டு கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.பல்வேறு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல், பத்து நாட்களுக்கு முன்னரே மங்களூர் துறைமுகத்தை அடைந்தது. Read the rest of this entry »

ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 3-ந்தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து 6-வது அணு ஆயுத சோதனை நடத்தியது. அதற்கு முன்னதாக ஐப்பான் மீது பறந்து செல்லும் வகையில் ஏவுகணை சோதனையும் நடத்தியது. Read the rest of this entry »

கைகழுவச் சென்றபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம், இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளது என, பானம பொலிஸார் தெரிவித்தனர்.போல் ஸ்டுவாட் மக்லன் (வயது 24) என்ற பிரித்தானிய ஊடகவியலாளரே, நேற்று (14) முதலையால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். Read the rest of this entry »

குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறும், மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று யாழ்.கச்சேரிக்கு முன்பாக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள். Read the rest of this entry »

September 14, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.
1846 – யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர். Read the rest of this entry »

36 வயதினிலே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் `மகளிர் மட்டும்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கிறார்கள். Read the rest of this entry »

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. எனக்கும் அரசியல் பற்றிய எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் பொருந்தவில்லை. ஒத்துப்போகவில்லை. Read the rest of this entry »

யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 40 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

மலேசியாவிலுள்ள கோலம்பூரில் மதப்பள்ளி ஒன்றில் இன்று (14) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்