உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



‘வினோதமான செய்திகள்’

                                    ஐப்பாசி  30 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1485 – ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.
1905 – ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான். Read the rest of this entry »

                                     ஐப்பாசி  26 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

740 – ரோமப் பேரரசின் கொன்ஸ்டண்டீனபோல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.
1640 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.
1859 – வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர். Read the rest of this entry »

                                ஐப்பாசி  25 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1147 – முதலாம் அஃபொன்சோ தலைமையில் போர்த்துகீசர் லிஸ்பன் நகரைப் பிடித்தனர்.
1415 – அஜின்கோர்ட் நகரில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியின் படைகள் பிரான்சைத் தோற்கடித்தனர்.
1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் டச்சு கப்டன் டேர்க் ஹார்ட்டொக். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஹார்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. Read the rest of this entry »

 

 

untitledஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organisation) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள்.1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். Read the rest of this entry »

Unavngivetபிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் ஸ்கேனில் இறந்து போன தனது தாயின் முகம் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.கருவுற்றிருக்கும் ரெபேகா மலியா என்பவர் கடந்த யூன் மாதம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்போது, இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் இறந்துபோன தனது தாயின் முகம் பதிவாகியிருந்துள்ளது. Read the rest of this entry »

 

untitledதமிழர்கள் கலாச்சாரத்தில் தாலி!

 தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.( மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள். Read the rest of this entry »

imagesL1UQP7O4வேலண்டைன்ஸ் டே

வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது. பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம்

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
வாசகர்கள்


முந்தைய செய்திகள்