‘நினைவஞ்சலி’
அமரர் திரு.இ.திருநாவுக்கரசு அவர்களின் ஞாபகார்த்தமாக மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு அவரது பிள்ளைகளால் சிறுவர் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் அமரத்துவமடைந்த எமது ஊரவரான அமரர் திரு.இ.திருநாவுக்கரசு அவர்களின் 31ஆவது நாள் நினைவை ஒட்டி அவரது ஞாபகார்த்தமாக மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு ரூபா 15 000 பெறுமதியான சிறுவர் நூல்கள் அவரது பிள்ளைகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை 26.04.2013 அன்று பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்ற நூலகத்தில் இடம்பெற்ற மாணவர் மன்ற கலந்துரையாடலின்போது, அவரின் மகள் திருமதி சி.சிவமலர் அவர்களால் இப் புத்தகங்கள் நூலக உதவியாளர் செல்வி யாழினியிடம் கையளிக்கப்பட்டது.
இக் கையளிப்பின்போது அங்கு குழுமியிருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அமரர் இ.திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கும், அவரின் ஞாபகார்த்துமாக இத்தகைய அரும் பெரும் செயலைச் செய்த அவரது பிள்ளைகளுக்கும் தமது மரியாதயையும், கௌரவத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.
இன்று எமது ஊரில் இவ்வாறான காலம் சென்ற மூத்தோரின் 31ஆவது நினைவு நாளில் வெறுமனே சில தேவாரங்களை இட்டு நிரப்பி ஒரு நினைவுமலரை வெளியிட்டு, அது ஒரு சில நாட்களில் அலட்சியம் செய்யப்படுகின்ற சூழலில், தமது தந்தையை காலம் முழுவதும் எமது கிராமத்து மக்கள் நினைவுகூரும் வகையில் தங்கள் மனங்களில் நீங்கா இடம்பெறச் செய்த திரு.இ.திருநாவுக்கரசு அவர்களின் பிள்ளைகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். அத்துடன் இச்செயல் எமது கிராமத்தவர்க்கு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைவதாக அவர்கள் மேலும் கருத்துக்களை வெளியிட்டமையை அவதானிக்க்கூடியதாக இருந்தது.
கடந்த 09-04-2013 அன்று மட்டுவிலில் சிவபதம் எய்திய எமது குலதெய்வம் அமரர். திரு. செல்லையா நடராஜமூர்த்தி அவர்களின் 21ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக் கிரியகளும் 29.04.2013 திங்கட்கிழமை காலை; மட்டுவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
எமது தந்தை அமரர். திரு செல்லையா நடராஜமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமும் இணையத்தளங்கள் மூலமும் அனுதாபம் கூறி எமது துக்கத்தில் பங்கு பற்றியவர்களுக்கும்; அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்; மரணச்செய்தியை எம் ஊர் இணையங்களில் பிரசுரித்து உலகறியச் செய்த இணையத்தாருக்கும், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தவர்களுக்கும்; தேவையான போதெல்லாம் உதவி, ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும்; மற்றும் இவ் நிகழ்வில் எம்மோடு தங்கி எம் துயர் துடைத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்


















































