‘அம்மன் கோவில்’



தேர்த்திருவிழா
சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமைக்கப்பெற்ற தேரானது அழித்தலைக் குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும் அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன. அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஓடுலிறது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஓடுவதற்கு நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருள வைத்திருக்க வேண்டும். தேர் சரியான பாதையிலே ஓடுவதற்கிசைவாகச் சறுக்குக் கட்டைகள் போட்டு அதனைக் கட்டுப்படுத்துவதுபோல நமதுவாழ்க்கையையும் நக்வழிகளில் நெறிப்படுத்த வேண்டும். மேலே கோபுரம்மோல் குவிந்து செல்லும் தேர்க்கலச முடிவிற் குடைநிழல் தெரிகின்றது. மனம் குவிந்து மேலான சிந்தனையுடன் இறைவனைத் தியானித்தால் அவனது அருட்குடை நிழல் நம்மைத் துயர வெளியிலிருந்து பாதுகாக்கும்.
தேர்க் காலிலே தேங்காயைச் சிதற அடித்து நமது துன்ப துயரங்களைச் சிதற வைப்பதையும், வலிய தேங்காய் ஓடு பிரிந்து வெண்ணிற உட்பாகம் வெளிப்படச் செய்து மல நீக்கத்தை உருவகப் படுத்துவதையும் இந்தத் தேர்த் திருவிழாவில் காணலாம்.
இவ்வாறு அநேக தத்துவங்களை விளக்கும் தேர்த்திருவிழா (பதினைந்துநாள் மஹோற்சவத்தில்) பதின்நான்காம் நாள் பகல் நடைபெறும். வழ்மையான கிரியைகள் நடைபெற்று உள்வீதி வலம் வந்து வெளியே கொண்டுவந்து சுவாமிய தேரிலே வீற்றிருக்கச் செய்வர். முன்னதாக தேர்த்தட்டு புண்ணியாக வாசனம் செய்து சுத்தம் செய்யப் பெற்றிருக்கும்.
தேரினில் ச்வாமி இருக்கையி யாத்ராதானம் முதலியவற்றை வழ்ங்கி விநாயகரைப் பிரார்த்தித்துத் தேங்காய் உடைத்ததும் தேர் புறப்படும்.
தேர் வீதி வலம் வந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தும் வழ்க்கம் எங்கும் உண்டு. உக்கிரமூர்த்தியாக அழித்தல் தொழில் முடிந்து வரும் இறைவனைக் குளிர்விக்கும் பாவனையே இது. சுவாமிக்குப் பச்சை சாத்துவது மட்டுமன்றி சிவாச்சாரியார்களும், உதவியாளர்களுங்கூட அவ்வேளையில் பச்சை வேட்டி சால்வைகளுடன் காணப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயங்களில் பணிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலையமும் ஒன்றாகும்.ஆங்கிலேயர் தொகுத்து வைத்திருந்த அரச பதிவேடுகளில் இவ்வாலயத்தைப் பற்றிய குறிப்புக்களை காண முடிகின்றது.
அன்னை பராசக்தியை பற்பல திருக்கோலங்களிலும், காளி, துர்க்கை, ஈஸ்வரி எனப் பற்பல நாம கரணங்களிலும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அவற்றுள் முத்துமாரி என்ற மூர்த்தமும் ஒன்று. மக்கள் மிகப் புராதன காலம்தொட்டு தொற்றுநோய், பஞ்சம், வரட்சி போன்ற துன்ப நிகழ்வுகள் தம்மை அடையாது பாதுகாக்க முத்துமாரி அம்மனை வழிபட்டு வருகின்றார்கள்.





































