தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘எம்மவர் ஆக்கங்கள்’

 0021சிவபூமி என அழைக்கப்படும் ஈழத் திரு நாட்டின் வடபால் அமைந்துள்ளது இந்துக்கள் நிறைந்து வாழும் யாழ்ப்பாணமாகும் .இதன் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள மிகப் பழம் துறைமுகம் ஜம்புகோளம் எனப்படும் சம்பில்த்துறையாகும்.அன்றைய புத்த தர்மம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நுழைவாயில் இதுவே என இலங்கையின் வரலாற்றைக் கூறும் மிகப் பழம் சிங்கள இலக்கிய நூலான மகாவம்சம் கூறுகிறது .
கிராம வரலாறு
சம்பில்த்துறை பண்டைக்காலத்தில் மிகப் பெரும் வணிகத் துறையாக விளங்கி யுள்ளது .இக் காலத்தில் இப்பகுதி திசமழவன் என்ற தமிழ் மன்னனின் சிற்றரசாக இருந்ததாகக்
கூறப் படுகிறது .இதற்காதாரமாக இருப்பது சுழிபுரம் கிழக்கு கண்ணகை அம்மன் திசைமளை கண்ணகை எனவும் இதனூடாக சம்பில்துறையை அடையும் வீதி மழுவை வீதி எனவும் காணப்படுகிறது .இத் துறையின் ஊடாக வணிகம் செய்தவர்களில் மிகவும் பிரபல்யமானவர்கள் தென்னிந்தியச் செட்டியார் இனத்தவர்களேயாவர் .வணிகம் செய்ய வந்தவர்கள் நாளடைவில் இத்துறையின் தென்கிழக்கு பக்கமாக உள்ள மறுத்த நிலத்தை அண்டிய பகுதிகளில் தம் குடியிருப்பை அமைத்தனர் .இவர்கள் குடியிருப்புகள் சாந்தை செட்டிகுறிச்சி சாத்தாஒலை காலையடி சுழிபுரம் கிழக்கு திசமளை குன்சங்கலட்டி மாதகல் மேற்கு ஆகிய பகுதிகளில் அமைந்ததாக அறிய முடிகிறது .இதற்கு ஆதாரமாக “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “என்பதர்க் கேற்ப இவர்களால் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களாகும் .சாத்தாஒலை சிவன் (சம்பு நாதேச்வரம் ) திசைமளை கண்ணகை அம்மன் ஆலயம் சாந்தை ஈஸ்வரவினாயகர் ஆலயம் மாதகல் மேற்கு ஐயனார் ஆலயம் காலையடி ஞானவேலாயூதர் ஆலயம் வெற்றிமடம் முருகன் ஆலயம் ஆகிய இவ் ஊர் ஆலயமனைத்தும் இவர்களால் அமைக்கப்பட்டதேயாகும் . Read the rest of this entry »

DSC02840

Read the rest of this entry »

pongal-kavithai

http://people.panipulam.net/#256

அழ.பகீரதனின் இப்படியும் கவிதை நூல் வெளியீடு புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூலினை தாயகம் ஆசிரியர் திரு க. தணிகாசலம் வெளியிட முதல் பிரதியினை திரு கதிர்காமநாதன்(செல்வம்) அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் சிறப்புப்பிரதி பெற்று சிறப்பித்தனர். மேலும் நிகழ்வில் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நயப்புரை ஆற்றினார். சிறுவர் சிறுமியர் கவிகளை உரைத்தனர். புதியபூமி ஆசிரியர் திரு சி.கா. செந்திவேல் கருத்துரை ஆற்றினார்

http://people.panipulam.net/#252

ஈழத்தில் தயாரான திரைப்படங்களில் பலதின் பிரதிகள் கிடைக்காமல் அழிந்து போய்விட்டன. ஆனால் அவற்றில் சில காப்பாற்றப்பட்டு இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் குத்துவிளக்கு திரைப்படத்தை இன்று மறுபடியும் பார்க்கும் போது எம்மிடையே இருந்த பல கனவுகள் உடைந்து சிதறுகின்றன. ஆரம்பித்தில் இருந்து முடியும்வரை நம்மை எழும்ப விடாது உட்கார வைக்கிறது திரைப்படம்

காட்சி 3

(புனிதா டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்.. ராஜன் கைபேசியில் ஏதோ நோண்டிக்கொண்டிருக்கிறார். பலத்த இடி மின்னலோடு மழை பெய்கிற சத்தம் கேட்கிறது. டிவி நின்று விடுகிறது. இரைச்சலே கேட்கிறது. அதை சரிப்படுத்த ரிமோட் கொன்றோலரில் மாறி மாறி பொத்தான்களை அமுக்கிகிறார்).)
ராஜன்: என்ன புனிதா. உதய் கண்டபடி அமுக்கி உடையாதையும்.
புனிதா: மழை பெய்தால் இழுக்குதில்லை. ஏன் எண்டு அவங்களைக் கேக்கமாட்டியளே? காசெல்லே குடுக்கிறோம். காசைக் குடுத்துவிட்டு கதையை அரைகுறையாய் பாக்க வேண்டிக்கிடக்குது.
ராஜன்: உமக்கு உந்தப் பொம்பிளையள் மாறி மாறி அழுகிறதை பாத்து அலுக்கேல்லையே? Read the rest of this entry »

காட்சி 2
வரவேற்பறை ஒருவருமில்லாமல் வெறுமையாய் இருக்கிறது. கதவு மணி அடிக்க ராஜன் தயக்கத்துடன் கதவடிக்கு வருகிறான்.ராஜன் : ஆர் இந்த நேரத்திலை வாறது. புனிதா! ஆரும் வாறதெண்டு சொன்னவையே.
புனிதா : ஒருத்தரும் வர இருக்கேல்லை. ஆரும் வெள்ளைக்காரர் சமயம் பரப்ப வருகினமோ தெரியாது. முந்தி ஒருக்கா வந்திச்சினம். கதவைத் திறவாதையிங்கோ. ஓட்டையாலை பாருங்கோ.

ராஜன் : (பின் வாங்கியபடி) கீதா! நீர் போய்ப் பாரும். ஆரும் வெள்ளைக்காரர் எண்டால் வீட்டிலை ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லும்.
கீதா : (போய் கதவு ஓட்டையால்பார்த்து)
அம்மா அந்த அங்கிள் நிக்கிறார்.
புனிதா : எந்த அங்கிள்

கீதா : அப்பாவிண்ட ஊர் பணக்காரர். Read the rest of this entry »

 

காட்சி 1

சிட்னியிலே ஒரு அடுக்குமாடி வீடமைப்பில் யுனிற் ஒன்றின் வரேவேற்பறை. குடும்பத்தலைவி புனிதா சோபாவை மூடிக்கிடந்த பழைய துணியை அகற்றி ஒழுங்கு படுத்துகிறாள். அப்போது மகள் கீதா பள்ளியால் வருகிறாள். துணி விலகிய சோபாவைப் பார்த்து,

கீதா:                  ஆரம்மா இண்டைக்கு எங்கடை வீட்டை வருகினம்?’

புனிதா:     ஆர் சொன்னது ஆரோ வருகினமெண்டு

கீதா:        சோபாவை மூடின துணியைக் காணேல்லை. ஆரும் வந்தால்தானே சோபாவை நாங்கள் பாக்கக் கிடைக்குது.

புனிதா:      நான் மூடி வைக்காட்டில் அதை என்ன பாடு படுத்தியிருப்பியள். உங்களுக்கு சாப்பாடும் அதிலை படுக்கையும் அதிலை.

கீதா:        ஆரம்மா வருகினம்? Read the rest of this entry »

நடுக்கடலில் படகு ஒரு ராக் நடனக்காறரைப் போல் குதித்து குதித்து நடனமாடியது. ஒவ்வொரு தடவை எழும்பி விழும்போதும் கடல் நீர் ஒரு மூர்க்கத்தனமான போர் வீரனைப்போல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து ஆக்கிரமிக்க துடித்தது. போதாதற்கு மழை வேறு அடித்துக் கொட்டியது. ஒரு போர்களத்துள் நிற்கும் உணர்வில் பயணிகள் பயத்துடன் பதுங்கிக் கொண்டனர். கொட்டும் மழை விக்ரமாதித்தன் நினைவுகளை ஊரிற்கு கடத்திச் சென்றது. Read the rest of this entry »

Read the rest of this entry »

கரைச்சிக்குடியிருப்பு, முல்லைத்தீவு பிறப்பிடமாகக் கொண்டும் தந்தையாரது ஊரான கரவெட்டியையும் தாயாரது ஊரான பொலிகண்டியையும் வசிப்பிடங்களாகவும் கொண்ட கவிஞர் ஆனந்தமயில் முல்லைதிவ்யனுடன் ஓர் நேர்காணல். நான் அவரை நேர்காணல் செய்வதற்காக தொலைபேசியினுடாக தொடர்பு பொழுதே அவர் அச்சமடைந்திருந்தார் என்பதை உணர்தேன். இருந்தும் மீண்டும் அவர் என்னை அழைத்து எனது விபரங்களை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அவர் சிறிது நம்பத்தொடங்கிவிட்டார். Read the rest of this entry »

Read the rest of this entry »

படகை விட பெரிதாகவும் கப்பலை விட சிறிதாகவும் இரண்டும் கெட்டானாய் இருப்பதால் இதை படகு என்று அழைப்பதே கப்பல்களுக்கு கவுரவமாக இருக்கும். இந்தோனேசியக் கரையை விட்டு படகு உற்சாகமாகக் கிளம்பியது. ஆனாலும் சில பயணிகளுக்கு அது கிளாலி பயணத்தை நினைவில் நிறுத்தி கிலிகொள்ள வைத்தது. அடுத்த கரை சேர்வதற்குரிய சாத்தியங்கள் இரண்டு பயணத்திலும் ஒரேமாதிரித்தான் என்பது காரணமாயிருக்கலாம். ஆழ கடலை எட்டியதும் அலைகளின் தாளத்துக்கு படகு ஆடத் துவங்கியது. சிறு பிள்ளைகள் சத்தி எடுக்கத் துவங்கினர். பழகிப்போன படகோட்டி படகின் சுத்தம் கருதி எல்லோருக்கும் கடதாசிப் பைகள் விநியோகித்தான். பல இளைஞர்களுக்கும் இந்தப் பை தேவையாகவிருந்தது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 Untitled-2 copy ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print
வாசகர்கள்


முந்தைய செய்திகள்