உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தொடங்க இருந்த அவர் கடந்த மாதம் ஒத்தி போட்டார். Read the rest of this entry »

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த சிப்பாய்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 14 மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் வைத்து கப்பல் அளவீடுகளை மேற்கொண்டிருந்த போது, ஏற்பட்ட தீப்பொறிகள் காரணமாக அங்கு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

வவுனியாவில், வங்கி ஊழியர்கள் கடன்களுக்கு வரி வேண்டாம் என கோரி அரச வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read the rest of this entry »

சுறுலாப் பயணத்திற்கு ஏற்ற இடமாக, சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய அழகிய நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது.சுற்றுலா வழிகாட்டியான ‘லோன்லி பிளனெட்’ இணையத்தள நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
‘ஏன் நான் இன்னும் இலங்கையின் மீது நம்பிக்கையை இழக்கவில்லை, ஏன் நீங்களும் அதனை இழக்கக்கூடாது?’ என்ற தலைப்பில் ‘லோன்லி பிளனெட்’ கட்டுரை வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

லிபியாவில் உள்ள குடியேற்றவாசிகள் தங்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு காவல் நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

ஆனமடுவ – சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மென்லோ பார்க் என்ற இடத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். Read the rest of this entry »

கிளிநொச்சி நாச்சிக்குடா கடலில் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ நிறையுடைய அரியவகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது. Read the rest of this entry »

சட்டவிரோதமான முறையில் 2 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொண்டுவர முற்பட்ட சிங்கப்பூர் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

பதுளை, ஹாலிஎல பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் பதுளை விஷ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

பொகவந்தலாவ கிலானி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ள 75 என்.சி புகையிலை தூள் ரின்களுடன் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர் . Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்