உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுச் சபையின்கீழ் இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 5 மணித்தியாலத்தில் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டு விசேட நிகழ்ச்சி இன்றும் நாளையும் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று காலை 7 மணிக்கு அனைத்து பிரதேசங்களிலும் ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கையில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் அதி தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெல்லிப்பழை பிரதேசத்தில் 50 வழக்குகளுக்கு மேல் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏற்ற வகையில் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள், பற்றைக்காணிகளை துப்பரவு செய்யாதிருந்த காணி உரிமையாளர்கள் என பலருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது..

வீதிகளில் குப்பைகளை போடுதல், வீட்டின் முன் பக்கத்தில் பற்றைகளை துப்பரவு செய்யாமை, நீர் தேங்கக்கூடிய வகையில் பொருட்களை பாத்திரங்களை வைத்திருத்தல், நீர்த்தொட்டிகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தமை போன்ற குற்றங்களுக்கு இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு ஒழிப்புக் கட்டுப்பாட்டுச் சபையின் இந்நடவடிக்கையினால் யாழ். மாவட்ட மக்கள் அவசர அவசரமாக தமது சூழலைச் சுத்தம் செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் டெங்குத் தொற்றுக்குள்ளாகி 9வயதுச் சிறுமியொருவரும், 45 வயது தாயார் ஒருவரும் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்