உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இந்தோனேசியாவின் மெடான் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்ட குறித்த அகதிகள், மெடான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அங்கு சுமார் 450 ஈழ அகதிகள் தங்கி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் திறந்த முகாம்களுக்கு புறம்பாக மூடிய தடுப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் தங்களை மூன்றாம் நாடொன்றில் குடியேற்றக் கோரி அமைதிப் போராட்டம் நடத்திய ஈழ அகதி ஒருவர் இந்த மூடிய தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் வழங்கிய உறுதிமொழி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அங்குள்ள ஈழ அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்