உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை இன்று(23) ஆரம்பித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் வட மாகாணம் முழுவமும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களால் கையெழுத்துகள் நேற்றுப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்களால் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவுமு், இந்த கையெழுத்துப் போராட்டத்துக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டுமெனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்   தலைவர்  கிருஷ்ணமேனன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்