உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ். மாவட்டத்திற்குட்பட்ட ஆலயங்களில் மிருகபலி (வேள்வி) க்கு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாட்டு முறைமைகளை தடைசெய்ய கோரி இந்து மகா சபையினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக யாழ்இமேல் மேல்நீதிமன்றில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்தனர்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த 2016 ஆம்ஆண்டு ஏப்பிரல் மாதம் 01 திகதி முதல் நடைபெற்று வந்தது.

அன்றைய தினம் முதல் இதுவரை கால பகுதியில் மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முற்றாகத் தடைவிதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இத்தீர்ப்பின்போது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கருத்துத் தெரிவிக்கையில்,300 ஆண்டுகளாக பாரம்பரியமாக மிருக பலியிடல் வழிபாட்டு முறைமை இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும்இ அதற்கான அனுமதியினை இறைச்சிக்கடை சட்டத்தின் கீழேயே பெறப்படுகின்றது.

இந்து ஆலயங்களில் பூஜை வழிபாட்டுக்கு இறைசிக்கடை சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டு உள்ளது.இதற்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது அதிகார துஸ்பிரயோகம் ஆகும்.

ஏனெனில் இந்து ஆலயத்தில் 5ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் பேர் வரையில் கூடும் இடத்தில் 200 தொடக்கம் 500 வரையிலான ஆடுகள் மற்றும் கோழிகளை வெட்டி சாய்த்து பலியிடுதல் மிருக வதை செயற்பாடு அத்துடன் மிருகங்களை சித்திரவதை செய்யும் செயற்பாடாகும். அதற்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி அளித்துள்ளது.

சமய விழாக்களுக்கு அனுமதி வழங்கும் போதுஇ இறைச்சிக்கடை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்க கூடாது. சமய விழாக்கள் சட்டத்தின் கீழேயே அனுமதி வழங்க வேண்டும்.வீடுகளில் கொண்டாட்டங்களின் போது விருந்துக்காக ஒரு சில விலங்குகளை வெட்டுவதனை வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியும். அதற்காக நல்லூர்இ தலதா மாளிகை கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயங்களில் சமய வழிபாட்டு முறை என மிருக பலியிடலை மேற்கொள்ள அனுமதி கோரினால் அனுமதி வழங்க முடியுமா?

எனவே யாழ்.மேல் நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட இந்து ஆலயங்களில் பூஜைகளின் போதோ வேறு சந்தர்ப்பங்களிலையோ மிருகங்களை பலியிட கூடாது என தடை விதிக்கப்படுகின்றது. அதற்கு எந்த உள்ளூராட்சி சபைகளும்இ நீதவான் நீதிமன்றங்களும் அனுமதி வழங்க கூடாது.

அதனையும் மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முடியும். முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக குற்றமிழைத்தவர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட வேண்டும். என தீர்ப்பளித்தார்.

அத்துடன் இந்த தடையுத்தரவை உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராக முதலமைச்சர் உள்ளமையினால், முதலமைச்சருக்கும், வடமாகாண சுகாதார அமைச்சருக்கும், மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்