உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள தேவாயலம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தது 26 பேர்  பலி யாகியுள்ளனர்.ஞாயிறு திருப்பலியின் போது புகுந்த ஆயுததாரி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என குறிப்பிட்ட ஆளுநர் கிரேக் அபொட், டெக்சஸ் மாநில வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

5 தொடக்கம் 72 வயதுக்கு இடைப்பட்டவர்களே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக டெக்சஸ் மாநிலத்திற்கான பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்