Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன்  ஐந்து பேர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஐவரில் ஒருவர் முன்னாள் போராளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரிடமும் இருந்து  10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில்….வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து  1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் புத்தளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (07.11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து 2 கிலோ 70 கிராம் கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் (07.11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து மதவாச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து மதவாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று (08.11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 2 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் இன்று (08.11) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முன்னாள் போராளி என தெரிவிக்கப்படுகின்றது.
மற்றொரு நபர் கிளிநொச்சியில் இருந்து மிகிந்தலைக்கு கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து இன்று (8.11) கைது செய்யப்பட்டார்.

புல்மோட்டையைச் சேர்ந்த குறித்த நபரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த ஐந்து பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்