உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தூத்துக்குடி – கொழும்பு இடையே புதன்கிழமை தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது.

புரட்சி ஏற்பட்டுள்ள லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கப்பல் பலவற்றை இந்தியா அனுப்பி விட்டதால், இந்த கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தூத்துக்குடி – கொழும்பு இடையே வாரத்துக்கு 3 முறை பயணிகள் கப்பலை இயக்க திட்டமிடப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான தூரம் 280 மைல். கப்பலில் சென்றால் 10 முதல் 12 மணி நேரத்தில் கொழும்பு நகருக்கு சென்றடைய முடியும்.

முன்னதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது இருவரும் கூட்டாக தூத்துக்குடி – கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்