உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொலம்பியாவில் உள்ள கவ்கா மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியிலுள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொர்னிடோ நகரில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் கடந்த புதன்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தைச் சுற்றி வசித்து வந்த 3000க்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட அந்நாட்டு ஜனாதிபதி ஜீவான் மனுவல் சாண்டாஸ், இந்தச் சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவருக்கும் அரசு தரப்பில் இருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தெரித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்