உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வுனியா புகையிரத நிலைய வீதியில் இளைஞனொருவரைத் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்கள் முறியடிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியுடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த இளைஞனை இரு சொகுசு வாகனத்தில் வந்த குழுவினர் வழிமறித்து துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்தனர்.

அந்த இடத்துக்கு வந்த பொதுமக்களால் ஒரு குழுவினரும் அவர்கள் வந்த வாகனமும் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்த முயற்சித்தவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்