உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வழியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (14) மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பேரணி, யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மாவட்டச் செலயகம் வரை சென்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து, குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பேரணியாகச் சென்ற மாணவர்கள், நாவல் வீதியிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். தொடர்ந்து யாழ்.மாவட்டச் செயலகம் வரை சென்று, ஜனாதிபதிக்கான தமது கோரிக்கை மகஜர் ஒன்றையும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்