உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.  தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து வருகிறார்.

இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா?  எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்