Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக 6 கிலோ 43 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் அசோக பிரசாந்த தலைமையிலான குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமாக நின்ற சந்தேகநபரின் பயணப்பையை சோதனையிட்ட வேளையில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி கஞ்சாவினை கடத்திச்செல்ல முற்பட்ட, யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த துரைராசா துசிபன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்