உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நவம்பர் 17, 2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1292 – ஜோன் பலியல் ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
1511 – ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
1796 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 – எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1873 – பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
1878 – இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
1903 – ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
1922 – முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 – செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
1950 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
1968 – அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1970 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
1970 – டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
2003 – ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்