Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நாடகம்  காகிதப்புலிகள்.காட்சி  2. பாத்திரங்கள் :   பொன்னையா, மணியண்னை, மருமகன், பொலிஸ் (பொன்னையா வேப்பம் தடியினால் பல்லை   மினுக்கியபடி உரையாடல் தொடங்குகிறது. (உடுப்பு: சாரம்வேட்டி,பொலிஸ் உடுப்பு)

 

4 Responses to “காகிதப்புலிகள் பாகம் 2”

  • T.BALA. pannipulam:

    காகிதப்புலிகள் நாடகம் ஏன் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டவை என்பதுவே அவர்களின் சமூக ஆர்வம் புரியும்.அரசியல்,முதலாளித்துவம்,சாதியம் போன்ற பல விடயங்களை மக்கள் உணரும் வகைக்கே மாற்றினார்கள் ஆனால் எதை எல்லாம் நாடகமூலம் சொன்னோமோ அதில் பங்கு பற்றிய பலர் அக்கொள்கைகளை மறந்து வாழ்வது பலரும் கண்கூடாக காண்கின்றோம்.நல்ல முயற்ச்சி இக் களம் சரியாக பயன்படுத்தப்படவேண்டும். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

  • Ratnarajah:

    காகிதப்புலிகள் நாடகத்தில் ஆரம்பகாலங்களில் ஆரம்பக்காட்சி சினிமாவைப்போல் காதல்க்காட்சி, காதல்ப்பாட்டுபோட்டு ஆணும் பெண்ணுமாக சோடிசேர்ந்து ஆடுவார்கள். பார்வையாளர் மத்தியில் கைதட்டலும்,விசிலடியும் வரும். இறுதியில் ,சிற்பி வந்து இது அல்ல எமது நாடகம்,இதுவரைகாலமும் இப்படியான நாடகங்களை நீங்கள் பார்த்து, ரசித்தீர்கள்.அப்போது கைதட்டி விசில் அடித்த முகங்ககளில் அசடு வழியும் .பின்பு சிற்பி சொல்லுவார். நான் வடித்த சிலைகள் இப்போது உங்களோடு பேசும் . காகிதப்புலிகள் பலதடவை சிறிய சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு பல மேடைகள் ஏறியது .

  • அழ பகீரதன்:

    நல்ல முயற்சி தொடர்க. இந்த நாடகத்தில் சிற்பி ஒருவர் சிற்பங்களை செதுக்குபவராகவும் அவரது சிற்பங்களே சிலையாக இருந்து பின் இயங்குவதாகவும் இருக்கும். நாடகத்தில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நான் ஆரம்பத்தில் பார்த்தபோது இல்லாத காட்சிகளும் பின்னர் சேர்க்கப்பட்டன. பிற்காலங்களில் முதற்காட்சியில் சினிமா பாணியில் சோடி ஆடி பாடல் காட்சி காட்டப்பட்டு பின் சிற்பி வந்து சொல்லுவார் இதுவல்ல நாடகம் என்ற மாதிரி. இந்தவாறு மாற்றியமைக்கப்பட்ட நாடகத்தை நான் முதலில் குஞ்சன் கலட்டியில் நடாந்த சிவராத்திரி நாடக விழாவில் பார்த்தேன். அம்பாள் ஆலய புனருத்தாரணத்துக்காக அம்பாள் வடக்கு வீதியிலும் ஒரு நாடக விழா ரிக்கற் காட்சியாக நடாந்தது. அதில் மன்றத்தின் தயாரிப்பில் நாடகம் ஒன்று மேடையேற்றப்பட்டதாக ஞாபகம் அந்த நாடகத்தின் பெயர் தெரியுமா? காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தின் முதலாவது ஆண்டு விழாவில் காதலின் கீதம் என்ற நாடகம் நடைபெற்றது. அதில் யோகேஸ்வரன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தார். அது அரச உடுப்புக்கள் போட்டு நடித்த நாடகம். உறங்கும் உயிர்கள் நாடகம் திருகோணமலையிலும் பின்னர் விசவத்தனை முருக மூர்த்தி ஆலயத்திலும் மேடையேற்றப்பட்டது. அது எல்லாளன் துட்டகைமுனுவை வைத்து பின்னப்பட்ட நாடகம். இந்த நாடகத்தில் எல்லாளனாக சந்திரஹாசனும் துட்டகைமுனுவாக இரவீந்திரனும் நடித்தனர். நான் நினைக்கின்றேன். கற்பனையில் எழுதப்பட்டதென்று. மிகவும் நல்ல நாடகம். அதன் கருப்பொருள் எனக்கு ஞாபகம் இல்லை. அலையும் நெஞ்சம் நாடகம் ஒரு காதல் கதைதான். நட்பு முதல்முதலாக யாழ்ப்பாணத்தில் மேடையேறியது. இது தான் மன்றத்தின் முதலாவது தயாரிப்பு. இரண்டாவது மேடையேற்றமாக அம்பாள் ஆலய இரண்டாவது திருவிழாவில் மேடையேறியது.காகிதப்புலிகள் நாடகம் முதல்முதலாக சங்கானை கலாசார மண்டபத்தில் மேடையேறியது. தூங்காத தூண்கள் நாடகம் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் மேடையேறியது. இதனுடன் காகித புலிகள் நாடகமும் அங்கு மேடையேறியது. தூங்காத தூண்கள் நாடகத்தில் அயலூரவர்களும் நடித்தது குறிப்பிடத்தக்கது.யாழ் பல்கலைக்கழகத்தில்

  • Ratnarajah:

    தவறுக்கு வருந்துகிறேன்.காகிதப்புலிகள் நாடகத்தின்மூலம் சிறந்தநடிகருக்குரிய பரிசு திரு தி.யோகேஸ்வரனுக்குதான்கிடைத்தது. செவ்வானத்தில் ஒரு நாடகத்தின் மூலம்தான் திரு சோ.தேவராசாவுக்கு சிறந்தநடிகருக்குரிய பரிசு கிடைத்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்