Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் இன்று காலை 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மண்டபம் க்யூ பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதிக்கு சென்ற பொலிசார் அங்கு நாட்டு படகில் ஒருவர் சந்தேகமாக வந்ததை அவதானித்துள்ளனர்.இந்நிலையில் அவரை விசாரணை செய்தபோது   அவர் இலங்கையிலிருந்து நாட்டு படகு மூலம் மண்டபத்திற்கு தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் இருந்த தங்கம் சுமார் 16 கிலோ 800 கிராம் எனவும் இதனுடைய மதிப்பு 2 கோடி எனவும் க்யூ பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த கடத்தலில் சம்பந்தபட்ட முக்கிய புள்ளி யார்?

இலங்கையின் எந்த பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது என்ற கோணத்தில் மத்திய மாநில உளவுத்துறை பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர் கீழக்கரையை சேர்ந்த நசீர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இராமேஸ்வரம் – இலங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதால் இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கும், இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கும் இடையில் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை கடற்படையின் ரோந்து பணியில் உள்ள தொய்வே  கடத்தல் சம்பவங்களுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்