உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆர்ஜன்டினாவுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன பகுதியான தெற்கு அட்லான்டிக் சமுத்திரத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தை அமெரிக்கா உட்பட அணுஆயுதம் தொடர்பான மத்திய நிலையமும் உறுதிப்படுத்தியுள்ளன.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்டது வெடிப்பா அல்லது கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமா என்பது பற்றிய இறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருந்த போதிலும் குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் 44 பேர் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

கடந்த புதன்கிழமை அரா சேன் ஜுவான் (ARA San Juan) என்ற பெயர்கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்