உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க வர்த்தகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று அவசரமாக வேறொரு இடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குறித்த ஹெலிகொப்டர் ஹெனெகம வித்தியாலயத்தில் நேற்று மாலை தரையிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தர்கள் இருவர் மற்றும் இலங்கை வர்த்தகர்கள் சிலர் உட்பட 6 பேரை கொழும்பிற்கு அழைத்து சென்ற தனியார் ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், கடுமையான மழை மற்றும் இருளான தன்மை ஹெனெகம பிரதேசம் முழுவதும் காணப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் கிரிஉல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ள நிலையில், ஹெனெகமவில் தரையிற்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதனை கொண்டு செல்ல முடியாமையினால் அந்த இடத்தில் தரையிறக்கப்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார்.ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட வேளையில், அந்தப் பகுதி பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்