உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அஷ்ரப் வைத்தியசாலைக்கு முன்னால் இன்று(03) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.குறித்த விபத்து தொடர்பில் அந்த பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர் தெரிவிக்கையில்.

கல்முனையில் இருந்து வந்துகொண்டிருந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், சாய்ந்தமருது பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பல்சர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு தலையின் பின்புறம் அடிபட்டது.

இந்நிலையில் பல்சர் வண்டியில் பயணித்தவருக்கு அதே இடத்தில் இரத்த பெருக்கு அதிகரித்ததாகவும் அவர் வாந்தி எடுத்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன் பல்சர் வண்டியில் பயணித்த இளைஞன் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை மற்றைய மோட்டார் சைக்கிளில்  பயணித்த பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனைவரும் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்