உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்று ஏறாவூர் பகுதியில் இன்று அதிகாலை 1.20 அளவில் உணவகம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த லொறி உணவகத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா லொறி ஒன்றுடன் மோதியதுடன், உணவகத்தின் மீதும் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த கொத்து தயாரிப்பவர் காயமடைந்துள்ளார்.
அதிகாலை நேரம் இடம்பெற்ற அந்த விபத்துக்கு சாரதி நித்திரை கலக்கத்தில் இருந்தமையே காரணம் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்