உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தென்கொரியாவின் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீனவர்களின் படகு எதிர்பாராத விதமாக மோதியதில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.குறித்த படகில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் சென்று இருந்தார்கள்.இந்த சம்பவம் குறித்து உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

13 பேர் பலியாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 2 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.கடற்படைக்கு சொந்தமான 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்