உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சீரற்ற காலநிலையினால் வடக்கு கிழக்கில் ஏற்படக்கூடிய அனர்த்தத்தை எதிர்கொள்வது குறித்து வடக்கு கிழக்கில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம்மொன்று தற்பொழுது நடைபெறுகின்றது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக இந்த கூட்டங்கள் நடைபெறுவதாக வடக்கு கிழக்கு அதிகாரிகள் நமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் திருகோணமலை உள்ளிட்ட மாவட்ட பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு இடையே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய முன்னேற்பாடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க தாழ்வு நிலையின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய முன்னேற்பாடுகளுக்கான இந்த கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்