உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை பங்கீடு செய்வது தொடர்பில் ஏற்பட்ட இழுபறிப் போக்கினை அடுத்து தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகள் அவசர சந்திப்புக்கு தயாராகியிருப்பதாக நம்பரகமாக தெரியவந்திருக்கிறது.
ஒப்பீட்டளவில் மிக அதிகமான பங்கினை தமிழரசுக்கட்சி கோரியதை அடுத்து நேற்றைய கூட்டத்திலிருந்து ரெலோவும் புளொட்டும் வெளியேறியிருந்தன.

இந்த நிலையில் இன்று ஈபிஆர்எல்எப், தமிழ் காங்கிரஸ், புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக்கட்சி தன்னுடைய வீட்டுச் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலை சந்திக்கும் என்பதால், கூட்டமைப்புக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இன்றைய சந்திப்பு அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.

இருந்தபோதிலும் உதயசூரியன் சின்னத்தினை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதனிடையே இன்று காலை ஈபிஆர்எல்எப் கட்சி அலுவலகத்தில் ரெலோ அவசரசந்திப்பில் ஈடுபட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்