உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பேருந்துகள், மற்றும் ஏனைய வாகனங்கள் அனைத்தும் மாங்குளம் பொலிசாரினால் மறிக்கப்பட்டு வீதிச்சோதனையிடப்படும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.நேற்றிரவு(05) வாகனங்களை மறித்து சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ஏ9 வீதியில் மீண்டும் ஆரம்பித்துள்ள வீதிச்சோதனை நடவடிக்கை!

அண்மைய காலங்களில் வடக்கில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் குறித்த வீதிச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் மாங்குளம் நகர்ப்பகுதியில் நிறுத்தி சோதனையிடப்பட்டதோடு பயணிகளின் பயணப்பைகளும் சோதனையிடப்பட்டன.

அண்மையில் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிசாரிடம் மாட்டிவரும் நிலையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்