உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிறு வயதில் பாலுறுப்பில் சுன்னத் செய்யப்பட்ட இலங்கை பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளவை சந்திக்க உள்ளனர்.

பெண்கள் சுன்னத் செய்யப்படும் சட்டத்திற்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுப்பதற்காகவே இவர்கள் நீதியமைச்சரை சந்திக்க உள்ளனர்.நாட்டில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் மேற்கொண்டு வரும் பெண்களுக்கு சுன்னத் செய்யும் சம்பிரதாயத்திற்கு எதிராக கொள்கை ஒன்றை பின்பற்றி வரும் இவர்கள் அண்மையில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக தற்போது சூடான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்னா என்ற இந்த முறை பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது என பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தம்மால் மீண்டெழ முடியாத பாதிப்பு ஏற்படுவதாக சில முஸ்லிம் பெண்கள் தெரிவித்துள்ளனர்.இந்த துயரத்தில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றி, முஸ்லிம் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக சட்டத்தரணி எர்மிசா டெகல் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சுன்னத்தை ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பு பெண் உறுப்பு சிதைப்பு என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்