Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாகவும் உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 1980ம் ஆண்டில் இருந்து ஜெருசலேய நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகின்றது. அங்கு குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு இடம் பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என கூறியிருந்தார்.

அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் குறித்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பிரான்ஸ் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகள் பிரான்ஸ் என பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்