உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புட்டின் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் 2018 மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று ஜனாதிபதியானால் வரும் 2024 ஆம் ஆண்டுவரை நீடிக்கும் புட்டினின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்