உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் விடுத்த அறிவிப்புக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டிலர்சன் தனது எதிர்ப்பினை  வெளியிட்டுள்ளார்.
குறித்த முடிவினால் பல பிரச்சினைகள் தோன்றும் என தாம் தொடர்ந்தும் ட்ரம்பை எச்சரித்து வந்ததாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் மெட்ஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ்,இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் ப்ரைட்மென் ஆகியோர் ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க வாழ் யூத பிரஜைகள் ட்ரம்பிற்கு பலத்த ஆதரவை வழங்கிதுடன்,இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலமை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளதாகவும், அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்