உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை கடற்றொழில் அமைப்புக்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட செயலாளரும் வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தலைவருமான சோ.சுகிர்தன் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளக்குடியேற்றப்பட்ட மக்களில் கடற்றொழிலாளர்களது பயன்பாட்டிற்கென அரசினால் வழங்கப்பட்ட ஆவளை மீன்பிடி இறங்குதுறையில் வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன் மயானமொன்றை அமைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் 200 இற்கும் அதிகமான கடற்றொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காங்கேசன்துறை –மயிலிட்டி வீதியில் ஊறணி பகுதியில் குறித்த ஆவளை இறங்குதுறை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்