உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பன்முகங்கள் கொண்டவராகப் பாரதியார் விளங்குகின்றார்.
தனது கவிதைகளில் சமூக சீர்திருத்த கருத்துகளையும், தேச பக்தியையும் புகுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்தர்.  சங்க காலப் புலவர்கள் பிடியில் இருந்த புரியாத தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிஞராக பாரதி திகழ்ந்தார்.தனது மாறுபட்ட சிந்தனைகளினால் மூட நம்பிக்கைகளையும், முரண்களை உடைத்து, பிற ஆளுமைகளில் இருந்து பாரதியார் சற்றே வேறுபடுகிறார்.நூற்றாண்டுக்கு முன் பாரதியார் எழுதிய கவிதைகள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துபவையாகவே உள்ளன. சமூகத்தின், தமிழுலகின் விலைமதிப்பில்லா பொக்கிஷமான பாரதியாரின், சாகாவரம் பெற்ற படைப்புகள் காலங்களைக் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றர் 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டா பாரதி. 1921இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்