தமிழில் எழுத
பிரிவுகள்


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்ததாகத் தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்ட 29 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். போருக்குப் பின்னர் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்துக் கோரி பயணித்துவருகின்றனர்.
அவ்வாறு பயணிப்பவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்ற ஆஸி.அரசாங்கம் அவர்களை திரும்ப அனுப்பிவருகிறது.

இதன் அடிப்படையில் மேலும் 29 பேர் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை அடைந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்