Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிலின்பைன்சின் பிலிரான் மாகாணத்தில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் 23 பேர் காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்ததால், தீவின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

மீட்பு படையினர், போலீசார், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

போக்குவரத்துக்கான பாலங்கள் பல உடைந்து விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 10,000-கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்டோர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்