உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈரப்பெரியகுளம், அவுசப்பிட்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையில் இருந்த கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது தூக்கி வீசப்பட்ட மோட்டர் சைக்கிள் இரண்டாக உடைவுற்ற நிலையில் முன்னே சென்ற காருடன் மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது.வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே குறித்த மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தின் போது இதில் பயணித்த 25 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்