உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அப்பல்லோவில் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் திகதி உயிரிழந்தார்.
இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை கமிஷன் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் வீடியோ வெளியாகியுள்ளது.

20 நொடிகள் ஓடக்கூடிய அந்த காட்சியில், நைட்டி அணிந்த நிலையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பழச்சாறு அருந்திக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார், நாளை ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்