உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த, புதுக்குடியிருப்பினை சேர்ந்த கொள்ளைக்கும்பல் ஒன்றின் தலைவனை கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளில் பெருமளவான கொள்ளையிடப்பட்ட நகைகளையும் புதுக்குடியிருப்பு பொலீஸார் மீட்டுள்ளார்கள்.
வட மாகாணம் முழுவதும் தொடரான கொள்ளைச்சம்பவங்களில் தொடர்பு பட்டு நீதிமன்றத்தினால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக காணப்படும் இவர்மீது, வடக்கில் 40 வரையான பிடியாணை பிறப்பிப்புக்கள் உள்ளது என்று புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி எம்.டி.சந்திரபால தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வடக்கில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பல நூற்றுக்கணக்கான கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.

அவற்றுக்கும் குறிப்பிட்ட நபருக்கும் தொடர்பு இருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த கொள்ளைக்கும்பலின் தலைவராக செயற்பட்ட புதுக்குடியிருப்பு இரணைப்பாலையினை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஜேன்சன் என்பவர் அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளார்.

முகமூடி அணிந்து வீடுகளுக்குள் செல்லும் இந்த குழு வீடுகளில் மக்கள் வைத்திருக்கும் பொருட்களை அதாவது பொல் மற்றும் கத்திகளை எடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் அவர்களை மிரட்டியும் கொள்ளையிட்டுள்ளார்கள்.

வடக்கில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த கொள்ளையர் புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் என புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எட்டுபேர் அடங்கிய பொலிஸ் குழு சிறப்பாக புலனாய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் களவாடப்பட்ட உந்துருளி ஒன்றில் பயணித்த குறித்த கொள்ளையரை பிடிக்க முயன்றபோது உந்துருளியினை கைவிட்டுவிட்டு விழுந்த காயத்துடன் தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்திற்குக் களவாக சென்று, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவேளை புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த கொள்ளையரை திருகோணமலை சென்று, கடந்த 08ம் திகதி அன்று கைதுசெய்துள்ளதுடன் இவரது விபரங்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இவரை சிறையில் அடைத்துள்ளார்கள்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த குழுவினை சேர்ந்த மேலும் ஒருவர் கடந்த வாரம் விசுவமடுபகுதியிலும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் வவுனியா மாவட்டத்திலும் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், குறித்த இளைஞர் குழுவினரால் கொள்ளையிடப்பட்ட நகைகள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் 30 வரையான பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த கொள்ளையர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்