உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முத்து வினாயகா மூவிஸ் நிறுவனம் சார்பில் ராஜாமணிமுத்து கணேசன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’. இதில் டி.வி. புகழ் ஜெகன் கதை நாயகனாக காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஹானா நடிக்கிறார். வில்லனாக பாடலாசிரியர் பிறைசூடன் நடிக்கிறார். இவர்களுடன் விவேக்ராஜ், சேரன் ராஜ், டிசோசா ரவிக்குமார், கொட்டாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இயக்கம் – முருகலிங்கம். இவர் இயக்குனர் கார்த்திக் ரகுநாத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்.ஒளிப்பதிவு – சிவராஜ், பாடல்கள் – பிறைசூடன், கதை, திரைக்கதை, வசனம் – காரைக்குடி நாராயணன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் திரைக்கதை எழுதியுள்ளார். தயாரிப்பு – ராஜாமணி முத்து கணேசன், இது முழு நீள நகைச் சுவை படமாக உருவாகிறது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்