உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் உரிமையாளர் மரணமடைந்ததுடன் அவரது மனைவி ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிம்புலாபிட்டிய, இத்தொடகொடல்ல பிரதேசத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தில் பட்டாசு தொழிற்சாலை அருகில் இருந்த வீட்டுக்கும் வீட்டிலிருந்த பொருட்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. அத்துடன் மூன்று ஆடுகளும் இரண்டு நாய்களும் தீயில் வெந்து இறந்துள்ளன.

சம்பவத்தில் கமவாசகம கமராலகே நிரேஷ் சந்தன குமார (30 வயது) என்பவரே தீயில் கருகி மரணமாகியுள்ளார். நிமல்கானோத் நந்தி என்ற பெண்ணே தீ காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்