உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு வெளியே கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டாக்ஹோம் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு வெளியே உள்ளூர் நேரப்படி காலை 10.07 மணியளவில் வீதியில் காணப்பட்ட மர்மப்பொருள் ஒன்றை கையில் எடுத்தபோது அது வெடித்துள்ளது.

இதில் 45 வயது பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். அதில் சுமார் 60 வயதுடைய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் மேற்படி வெடிப்புச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் போல் தோன்றவில்லை எனவும் வெடித்த மர்மப்பொருள் கைக்குண்டாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்