உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இங்கிலாந்தில் உள்ள பெட்போர்ட்‌ஷயர் கவுண்டியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹிக்நெட் (32).இவர் தனது தந்தை ஜேம்ஸ் மற்றும் தாயார் ஸ்டெப்னியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது தாய், தந்தையை கொல்ல சதி திட்டம் தீட்டினார்.
இதையொட்டி ஒருவரை சத்தமில்லாமல் கொல்வது எப்படி என இணைய தளத்தில் தேடினார். அதன்படி அவர்கள் சாப்பிடும் உணவில் வி‌ஷம் கலக்க முடி வெடுத்தார். அதை தொடர்ந்து அவர்கள் சாப்பிடும் பப்ஸ் உணவில் வி‌ஷம் கலந்து சாப்பிட கொடுத்தார்.

அதை சாப்பிட்டதும் இருவரும் மயக்கம் அடைந்தனர். 24 மணி நேரம் கழித்து ஜேம்சுக்கு மயக்கம் தெளிந்தது. அவர் எழுந்து போலீசுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த போலீஸ் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர்.

பின்னர் மகன் ரிச்சர்ட் ஹிக்நெட்டை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே ரிச்சர்ட் கோர்ட்டில் ஆஜார்படுத்தப்பட்டார். அப்போது தனது பெற்றோரை கொல்லவில் அம்பு வாங்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே கோர்ட்டு உத்தரவுபடி அவர் மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தனது மகன் செயலை மன்னித்து விட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்